செவ்வாய், 9 ஜூன் 2009 (15:08 IST)
மாணவர்களின் சில அலப்பறைகள்..
டீச்சர் : நீ என் வகுப்புல தூங்க முடியாது. தெரியுமா ?
சிறுவன் : தெரியுமே. ஆனால் நீங்க பேசாம இருந்தீங்கன்னா முடியும்.
ஆசிரியர் : காந்திஜீ வாழ்நாள் முழுதும் சட்டை அணியவில்லை.
இதிலிருந்து என்ன தெரிகிறது?
மாணவன் : அவர் உடம்பு தெரியுது சார்.
உங்கிட்ட 1 ரூபா இருக்கு, உங்கப்பா கிட்ட 1 ரூபா கேக்கற. இப்போ உன்கிட்ட மொத்தம் எவ்வளவு இருக்கும்?
ஒரு ரூபா இருக்கும்.
உனக்கு கணக்கு தெரியல?
உனக்கு எங்க அப்பாவை பத்தி தெரியல!