மெரினா கடற்கரையை சுத்தப்படுத்தும் மன்சூர் அலிகான் - வைரல் வீடியோ

சனி, 21 ஜனவரி 2017 (16:10 IST)
ஜல்லிக்கட்டு வேண்டும் என சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான இளைஞர்கள் கூடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.


 

 
அரசியல்வாதிகளும், நடிகர்களும் தங்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது என போராட்டக்காரர்கள் திட்டவட்டமாக கூறிவிட்டனர். ஆனலும், இந்த போராட்டம் தொடங்கிய கடந்த 15ம் தேதியே நடிகர் மன்சூர் அலிகான், மயில்சாமி போன்ற நடிகர்கள் அங்கு சென்று தங்களின் ஆதரவை தெரிவித்தனர். 
 
இதில் போராட்டம் துவங்கிய நாள் முதல் மன்சூர் அலிகான் தினமும் மெரினா கடற்கரை சென்று தன்னுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார். 
 
இந்நிலையில், மெரினாவில் மாணவர்களின் எண்ணிக்கையால் சேர்ந்த குப்பைகளை, அவர் துடைப்பம் எடுத்து சுத்தம் செய்யும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவர் துடைப்பதை கண்ட சில இளைஞர்கள், அவரிடமிருந்து துடைப்பத்தை வாங்க முயன்றனர். ஆனால் அதை தர மறுத்ததோடு, அவரே குப்பைகளை சுத்தம் செய்தார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்