உலகிலேயே அதிவேக இண்டெர்நெட் வசதி....ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு !

சனி, 23 மே 2020 (18:51 IST)
ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் இணைந்து அதிவேக இண்டெர்நெட் வசதியைக் கண்டுபிடித்துள்ளனர்.

இருபத்தியோராம் நூற்றாண்டில் இணையதளத்தில் வேகம் அதிகரித்துள்ளது. குறிபாக இண்டர்நெட்டின் பயன்பாடு உலகம் முழுவதும் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் அனைவரின் வீடுகளிலும் இண்டெர்நெட் பயன்பாடு அதிகரித்துளது. தற்போது 2ஜி., 3ஜி. 4ஜி என இண்டர்நெட் வேகம் உள்ள நிலையில் 5ஜி சேவைக்கு உலகநாடுகள் தயாராகி வருகின்றன.

இந்நிலையில் அதிவேக இண்டர்நெட் வசதியை ஆஸ்திரெலிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.இதில் என்ன விஷேசம் என்றல் 1 வினாடியில் 1000 ஹெச்டி திரைப்படங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எப்ன தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.எம்.ஐ.டி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மோனாச்க் ச்வின்பேர்ன் இணைந்து ஒருவிநாடிக்கு 44.2 டெட்ராயில் என்ற வகையில் இந்த இண்டர்நெட் வேகத்தில் உருவாக்கி  சோதன செய்துள்ளனர்.வழக்கமாக கண்ணாடி சிப்பில் 8 லேசர்கள் பயன்படுத்துவார்கள். இந்த லேசர்களுக்கு பதில் புதிய மைக்ரோ காம்ப் என்ற சாதனத்தைப் பயன்படுத்தி இண்டெர்நெர் வேகத்துக்கு பயன்படுத்தியுள்ளனர்.

இனிவரும் காலத்தில் இந்த இண்டர்நெட் வேகம் மக்களின் பயன்பாட்டு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ள்து.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்