வாட்ஸ்அப்பில் செய்தியை மாற்றி அனுப்பிவிட்டீர்களா? கவலை வேண்டாம்!

புதன், 7 ஜூன் 2017 (14:28 IST)
வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பும்போது தவறுதலாக வேறொருவருக்கு அனுப்பிவிட்டால்; அதை திரும்ப பெற்றுக்கொள்ளும் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.


 

 
சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ்அப் அன்றாட வாழ்கையில் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தக்கூடிய ஒன்று. வாட்ஸ்அப் நிறுவனம் பயனாளர்களுக்கு அவ்வப்போது புதிதுபுதிதாக அப்டேட்டுகளை வெளியிட்டு அசத்தி வருகிறது. வாட்ஸ்அப் சாட் செய்துக்கொண்டிருக்கும் போது தவறுதலாக வேறொரு நபருக்கு செய்தியை அனுப்பி விட்டால் அதை திரும்ப பெற முடியாது. இதனால் பல சிக்கல்கள் ஏற்படும்.
 
தற்போது வாட்ஸ்அப் அதன் புதிய அப்டேட்டில் இதற்கு தீர்வு அளித்துள்ளது. தவறுதலாக அனுப்பிய செய்தி, படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை 5 நிமிடத்திற்குள் திரும்ப பெற்றுக்கொள்ளும் ‘ரீகால்’ என்ற வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி கொண்ட அப்டேட் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
தற்போது உள்ள வாட்ஸ்அப் பதிப்பு 2.17.190. அடுத்து 2.17.210 என்ற பதிப்பு வெளிவரும். அதன் பிறகு 2.17.213 என்ற பதிப்பு வெளிவரும். இவை இரண்டு பதிப்பும் வெளிவந்த பின்தான் இந்த ‘ரீகால்’ வசதிக்கொண்ட பதிப்பு அதாவது 2.17.30 வெளிவரும். அதுவும் முதலில் இந்த 2.17.30 பதிப்பு ஐபோனுக்கு தான் வெளியாகும்.
 
இந்த தகவல்கள் வாபீட்டாஇன்ஃபோ என்ற டெக் தளத்தில் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்