இனி டுவிட்டரிலும் லைவ் வீடியோ

வியாழன், 15 டிசம்பர் 2016 (21:37 IST)
ஃபேஸ்புக் போன்று டுவிட்டர் நிறுவனமும் லைவ் வீடியோ சேவை அறிமுகம் செய்துள்ளது. 


 

 
டுவிட்டர் பொதுவாக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைதளமாக இருந்து வருகிறது. ஃபேஸ்புக் நிறுவனம் தான் முதன் முதலில் இந்த லைவ் வீடியோ சேவையை அறிமுகம் செய்தது.
 
அனால் இந்த சேவை பயனாளர்கள் முழுமையாக பயன்படுத்த முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது. வெகு நேரம் லைவ் வீடியோ செய்ய முடியவில்லை என்ற கருத்து பரவி வந்தது.
 
இந்நிலையில் தற்போது டுவிட்டர் நிறுவனம் லைவ் வீடியோ சேவை அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்ட் மற்றும் iOS பயனர்கள் என அனைவரும் இந்த சேவையை பயன்படுத்தலாம். இதற்கு முன்னர் Periscope வாயிலாக மட்டுமே ட்விட்டரில் லைவ் வீடியோ பகிர முடிந்தது. 
 
இனி பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அவர்களது அறிவிப்புகளை டுவிட்டரின் இந்த லைவ் வீடியோ சேவை மூலம் வழங்கவும் வாய்ப்புள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்