சய்லெண்டாய் ரிசார்ஜ் விலையை மாற்றி அமைத்த ஜியோ!!

புதன், 15 டிசம்பர் 2021 (12:44 IST)
ஏற்கனவே ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வழங்கி வந்த ரூ. 98 சலுகை தான் தற்போது ரூ. 119 என மாற்றப்பட்டுள்ளது. 

 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜியோ நிறுவனம் ப்ரிபெய்டு கட்டணத்தை உயர்த்தி உள்ளது.  இந்த புதிய கட்டணம் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதனிடையே ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ரூ. 119 சலுகை பலன்களை சத்தமின்றி மாற்றியமைத்து இருக்கிறது. 
 
ஆம், ஏற்கனவே ஜியோ வழங்கி வந்த ரூ. 98 சலுகை தான் தற்போது ரூ. 119 என மாற்றப்பட்டுள்ளது. தற்போது இந்த சலுகையில் தினமும் 300 எஸ்.எம்.எஸ். 14 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் போன்ற பலன்களும் வழங்கப்படுகிறது. ரூ. 119 சலுகையில் ஜியோ செயலிகளுக்கான சந்தாவும் வழங்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்