27 ஆண்டுகளுக்குப் பிறகு, மைக்ரோசாப்ட் இறுதியாக அதன் பழமையான உலாவியான இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை (IE) நிறுத்துகிறது. ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்திய உலாவி இப்போது அதிகளவு பயணர்களால் பயன்படுத்தப்படுவதில்லை.
விண்டோஸ் 95 க்கான கூடுதல் தொகுப்பாக 1995 இல் முதன்முதலில் வெளியிடப்பட்டது. 2003 இல் உலாவி 95 சதவீத பயனர்களை எட்டியிருந்தாலும், புதிய மற்றும் வேகமான போட்டியாளர்கள் தொழில்நுட்ப சந்தையில் நுழைந்ததால் நிலை படிப்படியாகக் குறைந்தது. பல பயனர்கள் IE மெதுவாக இருப்பதாகவும், செயலிழக்கக்கூடியதாகவும், ஹேக்குகளுக்கு ஆளாகக்கூடியதாகவும் இருப்பதாக புகார் கூறத் தொடங்கினர்.