கூகுள் குட்டப்பா ப்ரோமோஷனில் படு பிஸியான லாஸ்லியா!

திங்கள், 2 மே 2022 (17:38 IST)
கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களை ஒருவரான லாஸ்லியாவுக்குத்தான் முதன் முதலாக ஆர்மி தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

லாஸ்லியாவின் ஆர்மி அவரது புகழை பாடிக்கொண்டு லாஸ்லியாவை தினந்தோறும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆக்கிக் கொண்டிருந்தனர்.
பிக்பாஸில் கிடைத்த புகழை வைத்து லாஸ்லியா தமிழில் ப்ரண்ட்ஷிப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதை தொடர்ந்து தற்போது கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். வருகிற மே 6ம் தேதி வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் ப்ரோமோஷனில் இறங்கியுள்ள படக்குழு தற்போது அதன் புகைப்படங்களை வெளியிட்டு கவனத்தை ஈர்த்து வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்