ஒரிஜினல் ஐடியை விட ஃபேக் ஐடிக்கள்தான் அதிகம் போல..? – 300 கோடி ஃபேக் ஐடிக்களை நிக்கிய பேஸ்புக்!

வியாழன், 23 செப்டம்பர் 2021 (11:04 IST)
உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படும் பேஸ்புக் தளத்தில் 300 கோடி போலி கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் ஃபேஸ்புக்கை 500 கோடிக்கும் அதிகமான மக்கள் உபயோகித்து வருகின்றனர். உலக மக்கள் தொகையே 700 கோடி சொச்சத்தில் இருந்தாலும் கூட ஃபேஸ்புக்கில் உள்ள கணக்குகளின் எண்ணிக்கையோ உலக மக்கள் தொகையையும் தாண்டி இருப்பதாக சொல்லப்படுகிறது.

பெரும்பாலும் ஒருவர் தனக்கென ஒன்றுக்கும் மேல் ஃபேஸ்புக் கணக்கு வைத்துக் கொள்ளுதல், பழைய அக்கவுண்டை டீ ஆக்டிவேட் செய்யாமல் புதிய ஐடிக்களை பெறுதல் போன்றவற்றால் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

 இந்நிலையில் நீண்ட காலமாக பயன்படுத்தப்படாத மற்றும் போதிய தரவுகள் இல்லாத ஃபேஸ்புக் கணக்குகள் போலி கணக்குகளாக கருதி நீக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து பேஸ்புக் வெளியிட்டுள்ள தகவலில் கடந்த 6 மாதத்திற்குள்ளாக மொத்தமாக 300 கோடி போலி கணக்குகள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்