3டி டச் வசதியுடன் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய செயலி

புதன், 15 ஜூன் 2016 (17:51 IST)
3டி டச் வசதியுடன் கூடிய புதிய செயலியை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
 

 
அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகரில் 27வது சர்வதேச மென்பொருள் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு வரும் 17ம் தேதி வரை நடைபெறுகிறது.
 
இதில் ஆப்பிள் நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சியர்ரா 'Sierra' எனப்படும் புதிய மேக் ஓஎஸ் [macOS] 10.12 வெளியிடப்பட்டது. இதனை அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் வெளியிட்டார்.
 
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஐஓஎஸ்சில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஸ்லீப் மோடில் உள்ள ஐபோன் ஸ்கிரீன், போனை எடுத்தவுடன் ஆக்டிவ் மோடிற்கு மாறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
 
மேலும் 3டி டச் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்ளிகேஷன்களை பயன்படுத்தும் முன்பே, அதில் உள்ள தகவல்களை அறிய முடியும்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

வெப்துனியாவைப் படிக்கவும்