அண்ணனை எதிர்க்கும் தம்பி: ரிலையன்ஸ் குழுமத்தில் என்ன நடக்கிறது?
வியாழன், 17 நவம்பர் 2016 (10:55 IST)
ரிலையன்ஸ் ஜியோவிற்கு புதிய எதிரியா ஏர்டெல், வோடபோன், ஐடியாவை தொடர்ந்து அனில் அம்பானி தலைமையிலான ரிலிஜன்ஸ் கம்யூனிக்கேஷன்ஸ் முளைத்திருக்கிறது.
ஆர்காம் சமீபத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்கத்தொடங்கியது, மேலும் ரிலையன்ஸ் ஜியோவுடன் போட்டிபோட ஒரு முன்முயற்சியாக ஏர்செல் மற்றும் எம்டிஎஸ் உடன் இணைவதற்கு திட்டங்களையும் கொண்டிருக்கிறது.
தப்போது இந்த தொலை தொடர்பு ஆப்ரேட்டர் பல நுழைவு நிலை கட்டண திட்டங்களை கொண்டு வர ஆரம்பித்துள்ளது. அதில் சமீபத்திய ஒரு திட்டம் தான் வெறும் ரூ.40/-க்கு 28 நாட்கள் செல்லுபடியாகும் 1ஜிபி அளவிலான தரவு.
வழிமுறைகள்:
# மொபைல் எண்ணில் ரீசார்ஜ் செய்ய, எந்தவொரு ரீசார்ஜ் பயன்பாட்டையும் பதிவிறக்கம் செய்யலாம்.
# பின்னர் ரிஜிஸ்டர் செய்து குறிப்பிட்ட பயன்பாட்டை திறக்கவும். பிறகு, 10 இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்.
# மொபைல் எண்ணை உள்ளிட்டப்பின், ரூ.40/- திட்டத்தை காண முடியும் அந்த திட்டம் உங்கள் எண்ணிற்கு செல்லுபடியாகுமா என்பதை உறுதி செய்த பின்னர் கிளிக் செய்யவும்.
குறிப்பு:
இது ப்ரீபெயிட் பயனாளிகளுக்கு மட்டும் தான் மற்றும் ரிலையன்ஸ் ஜிஎஸ்எம் வாடிக்கையாளர்கள் மட்டும் தான்.