அமெரிக்க அரசு அதிரடி: ஹெச்-1பி விசா பெற நிறுவனங்களுக்குத் தடை

செவ்வாய், 12 ஜூலை 2016 (14:26 IST)
அமெரிக்க அரசு ஹெச்-1பி விசா வழங்கும் சில நிறுவனங்களுக்கு விசா வழங்கக்கூடாது என தடை விதித்துள்ளது.


 

 

இந்தியர்கள் ஐடி ஊழியர்கள் சொர்க்க வாசலாகப் பார்க்கப்படுவது ஹெச்-1பி விசா. ஏற்கனவே அமெரிக்காவிலும், அமெரிக்க நிறுவனங்களிலும் இந்திய ஐடி பணியாளர்கள் நியமனம் செய்யக்கூடாது என்று பல தீர்மானங்கள் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அமெரிக்க அரசு தற்போது சில நிறுவனங்களுக்கு ஹெச்-1பி விசா வழங்குவதற்குத் தடை விதித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக அமெரிக்க அரசு, ஹெச்-1பி மற்றும் எல்1 விசா வழங்குவதில் புதிய மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது, குறிப்பாக விசா கட்டணங்கள் இரட்டிப்பு. இதுமட்டும் அல்லாமல் ஹெச்-1பி விசா பெற விரும்பும் விண்ணப்பதாரர்களின் சம்பள அளவு முதல் பல முக்கிய விதிமுறைகளை அமெரிக்க அரசு புதிதாக அறிவித்து அமலாக்கம் செய்துள்ளது.

இந்நிலையில் விசா வழங்கும் சில நிறுவனங்களை தடை செய்து மேலும் இக்கட்டான நிலையை ஏற்படுத்திள்ளது.  அட்வான்ஸ்டு ப்ரொபஷ்னல் மார்கெட்டிக் இன்க், அமேசிங் ஆப்பிள் அல்லது ப்ளூ பெல், அந்தோனி இன்போர்மேஷன் டெக்னாலஜி இன்க், ஆம்னிபஸ் எக்ஸ்பிரஸ், கேர் வோல்டுவைட் இன்க், குளோபல் டெலிகாம் கார்ப், கன்டர்சன் ஸ்வீட்வாட்டர், யூனிவெர்சல் என்டர்பிரைஸ் கார்பரேஷன், NYVA சாப்ட் இன்க், ஒரியன் இன்ஜினியர்ஸ் இன்க், பிரித்வி இன்போர்மேஷன் சொல்யூஷண் இண்டர்நேஷ்னல், ஆர்எம்ஜேஎம் குருப் இன்க் ஆகிய நிறுவனங்கள் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

இதனால் இந்திய ஐடி நிறுவன ஊழியர்களின் அமெரிக்கக் கனவு வெறும் கனவாகவே போய்விடும் அளவிற்குச் சூழ்நிலை உருவாகியுள்ளது.


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்