இன்று முதல் இந்தியாவில் 5ஜி சேவை! – 4 நகரங்களில் தொடக்கம்!

புதன், 5 அக்டோபர் 2022 (10:05 IST)
இந்தியாவில் 5ஜி சேவையை தொடங்க பல நிறுவனங்களும் நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில் இன்று முதல் 4 நகரங்களில் 5ஜி சேவை தொடங்க உள்ளது.

இந்தியாவில் 5ஜி சேவைக்கான ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் 5ஜி சேவையை தொடங்க முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை உரிமத்தை ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா, அதானி நெட்வொர்க் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏலத்தில் எடுத்துள்ளன.

இந்நிலையில் இன்று தசரா கொண்டாடப்படும் நிலையில் இந்தியாவின் 4 நகரங்களில் சோதனை அடிப்படையிலான 5ஜி சேவையை தொடங்குவதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் வாரணாசியில் சோதனை அடிப்படையிலான 5ஜி பீட்டா சேவைகள் தொடங்கப்படுகின்றன. 1GBPS வேகத்தில் வழங்கப்படும் இந்த சேவைக்கு தற்போது 5ஜி சிம்கார்டுகள் தேவையில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

Edited By: Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்