5 ஜிபி இலவச நினைவகத்துடன் கூகுளின் ’ஜி-ட்ரைவ்’

சனி, 31 மார்ச் 2012 (15:57 IST)
FILE
5 ஜிபி இலவச நினைவகத்துடன் 'ஜி ட்ரைவ்' எனும் இணையதள நினைவக வசதியினை கூகுள் நிறுவனம் அடுத்த மாதம் முதல் வழங்க உள்ளது.

கிளவுட் ஸ்டோரேஜ் எனப்படும் மேக நினைவக தொழில்நுட்பத்தின் மூலம் வழங்கப்படவுள்ள இவ்வசதியானது அடுத்தமாதம் முதல் வாரம் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிகிறது.

தகவல் தொழில்நுட்ப உலகில் தற்போது அதிகமாகப் பயன்படுத்தப்படும் வசதிகளில் ஒன்றாக மேக நினைவகமும் உள்ளது.

பொதுவாக கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்க் எனப்படும் வன்தட்டில் தகவல்களைச் சேமித்து வைப்பதை விட, மேக நினைவக வசதியை பயன்படுத்தும் போது, உலகில் எங்கிருந்தும் பயன்படுத்த முடியும்.

கூகுள் நிறுவனம் சுமார் 5 ஜி.பி வரையிலான நினைவக வசதியினை ஜி-டிரைவ் மூலம் இலவசமாக வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேப் போன்ற வசதியினை வழங்கும் ' ட்ராப் பாக்ஸ்',’பாக்ஸ்’,மைக்ரோசாப்ட்டின் ‘ஸ்கை டிரைவ்’, அமேசான் க்ளௌட் ட்ரைவ், ஏடிரைவ், லைவ்டிரைவ் உள்ளிட்டவை வளர்ச்சியைடைந்து வருவதை கருத்தில் கொண்டே கூகுளும் தற்போது அந்த முயற்சியில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

News Summary:
Google will launch 'GDrive', an online storage service that will store large files online instead of in PC hard drives, early in April, according to leaks from sources.

வெப்துனியாவைப் படிக்கவும்