நோக்கியா 206 குறைந்தவிலை மொபைல் ஓர் அறிமுகம்!

வியாழன், 31 ஜனவரி 2013 (15:59 IST)
FILE
சர்வதேச சந்தையில் நோக்கியா தனது லூமியா சீரியஸ் மாடலை ஆப்பிள் ஐபோன் மற்றும் சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக களமிறக்கியுள்ள வேளையில் தனது குறைந்த விலை போன்களின் வரிசையில் புதிய நோக்கியா 206 மாடல் டியூவல் சிம் போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்ற நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட நோக்கியா 206 மொபைல் போன் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இதன் அதிகபட்ச விலை ரூ.3,599 மட்டுமே. இதன் திரை 2.5 அங்குல அகலம் கொண்டது. டிஸ்பிளே திறன் 240 X 320 பிக்ஸெல்களாக உள்ளது. நோக்கியா சீரியஸ் 40 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் போன் இயங்குகிறது.

இரண்டு சிம்களும் ஒரே நேரத்தில் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இதன் தடிமன் 12.4 மிமீ. எடை 91 கிராம். இதன் பொறிகள் (keys) 5 வழி ஸ்குரோலிங் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. நோக்கியா எக்ஸ்பிரஸ் பிரவுசர், நோக்கியா ஸ்லாம் புக், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஆகியவற்றுக்கான பொத்தான்கள் தரப்பட்டுள்ளன.

1.3MB திறன் கொண்ட கேமரா, விஜிஏ வீடியோவினைப் பதிவு செய்கிறது. 3.5 மிமீ ஆடியோ ஜாக், ஸ்டீரியோ FM ரேடியோ, 32GB வரை மெமரி அதிகப்படுத்த மைக்ரோ எஸ்டி ஸ்லாட், 2ஜி ஜிபிஆர்எஸ், எட்ஜ் மற்றும் புளுடூத் தொழில்நுட்ப வசதி கொண்டுள்ளது. இதன் பேட்டரி 1110 mAh திறன் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. மூன்று வண்ணங்களில் நோக்கியா 206 டியூவல் சிம் மொபைல் போன்கள் கிடைக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்