நோக்கியா லூமியா 505 அறிமுகம்!

செவ்வாய், 18 டிசம்பர் 2012 (15:04 IST)
FILE
மெக்ஸிகோவில் உள்ள விண்டோஸ் 7.8 போனை அடிப்படையாக வைத்து நோக்கியா நிறுவனம் லூமியா 505 என்ற போனை அறிமுகம் செய்யவுள்ளது.

விண்டோஸ் 8 இல் உள்ள சில பயன்பாடுகள் மற்றும் புதிய பாகங்களும் இணைக்கப்பட்டுள்ளது. புதிய முகப்புத்திரை மற்றும் மறுஅளவிடத்தக்க பாகங்கள் என புதுப்பொலிவுடன் தயாராகிறது.

நோக்கியா லூமியா 505 இன் விலை மற்றும் விற்பனைச் சந்தைக்கு வரும் தேதி இன்னும் வெளியாகவில்லை.

3.7 இன்ச் 480X800 திரை, விண்டோஸ் போன் 7.8, 256 ஜிபி ரேம், 8 மெகா பிக்ஸல் கேமரா, 4 ஜிபி போன் மெமரி, தொடர்ந்து 7.2 மணி நேரம் பேசும் திறன் கொண்ட 1300 மில்லிஆம்ப்ஹவர் பேட்டரி, 118.1மிமX61.2மிமX11.3மிமீ நீள அகலம், திரை அளவு, 131 கிராம் எடை ஆகிய வசதிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்