தேடுவதைச் சரியாகக் கொடுக்க கூகுள் தேடல் எந்திரத்தில் புதிய மேம்பாடு!

வியாழன், 17 மே 2012 (17:24 IST)
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 'பிங்' தேடல் எந்திரத்தில் அந்த நிறுவனம் சில புதிய மேம்பாடுகளைச் செய்தவுடன் உலகின் நம்பர் 1 தேடல் எந்திரமான கூகுளும் தேடல் எந்திரத்தில் புதிய மேம்பாடு ஒன்றைச் செய்துள்ளது.

அதாவது நாம் ஒரு விஷயம் குறித்துத் தேடும்போது நாம் தேடுவது இல்லையென்றால் இணைப்பு இணைப்பாக தேடிச் செல்வோம், தற்போது கூகுள் தேடல் எந்திரத்தில் செய்யப்பட்ட மாற்றத்தினால் நாம் தேடுவது என்ன என்பது பற்றிய சில தெரிவுகளை உடனேயே வழங்கிவிடுகிறது. இது அமெரிக்க பயனாளர்களுக்கு முதலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிறகு இது சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அதாவது நாலெட்ஜ் கிராப் என்ற ஒன்றை உள்ளடக்கி தேடும் போது நம் எண்ணம் அடுத்தது என்னவாக இருக்கும் என்பதை ஊகித்து அதற்கான தெரிவுகளை வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இப்போது சச்சின் டெண்டுல்கர் என்றோ அல்லது ஏதோ ஒரு பெயரையோ, எந்த ஒன்றையோ குறித்து நாம் தேடுகிறோம் எனில் நாலெட்ஜ் கிராப் என்ன செய்யும் என்றால் அந்த நபர் அல்லது அந்த விஷயத்தைப் பற்றிய அடுத்த 37% விடைகளை அது தானாகவே வழங்கிவிடும்.

இப்போது தேடலில் கிடைக்கும் முடிவுகளுக்கு அருகிலேயே 'ஸ்பெஷல் பேனல்' ஒன்றில் அந்த தேடல் பொருள் பற்றிய மற்ற விவரங்கள் அடங்கிய தகவல்கள் தோன்றும்.

எந்த ஒன்றையும் தேடும்போதும் அதனைப்பற்றிய நம் தேவைக்கேற்றதனான தகவல்களுக்கான தெரிவுகளில் 37%-ஐ நாலெட்ஜ் கிராப் பிடித்துக் கொண்டு நிறுத்தும்.

அதாவது தேடும் நபரின் எண்ணத்தில் உதிப்பதை கொண்டு வர கூகுள் முயற்சி செய்துள்ளது.

உலகம் முழுதும் இந்தப் பயன்பாடு பயன்படுத்தப்படும்போதுதான் இதன் திறன் தெரியவரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்