உத்வேக நடைபோடும் நோக்கியா லூமியா போன்கள்!

சனி, 12 ஜனவரி 2013 (14:26 IST)
FILE
இந்திய சந்தையில் நோக்கியா தனது புதிய, கவர்ச்சிகரமான லூமியா விண்டோஸ் போன் 8 போன்களை அறிமுகம் செய்துள்ளது.

நோக்கியா லூமியா 920, நோக்கியா லூமியா 820, மற்றும் நோக்க்யா லூமியா 620 ரக போன்கள் இந்திய சந்தைகளில் அதன் அதி தொழில்நுட்ப பயன்பாடுகளுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நோக்கியா லூமியா 920 மற்றும் 820 ரக போன்கள் இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் கிடைக்குமாறு செய்யப்பட்டுள்ளது. 620 ரகம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா லூமியா 920 ஒரு புது ரக ஸ்மார்ட் போன் ஆகும். விண்டோஸ் போன் 8 ரக மாதிரியாகும் இது. இதில் பியூர் வியூ இமேஜிங் வசதி உள்ளது.

நோக்கியா லூமியா 820 ஒரு ஸ்டைலிஷான ஸ்மார்ட் போன் என்று வர்ணிக்கப்படுகிறது. நோக்கியா லூமியா 620 ரக மாதிரி இளைஞர்களைக்கவரும் விதமான சிறந்த பொழுதுபோக்கு சாதனமாகவும் பயன்படும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.

நோக்கியா லூமியா 920-இன் சில சிறப்பு அம்சங்களில் குறிப்பிடத் தகுந்தது என்னவெனில் அதி தொழில்நுட்ப ஃப்ளோட்டிங் லென்ஸ் தொழில் நுட்பம் கொண்டது, சந்தையில் உள்ள பிற ஸ்மார்ட் போன்களை ஒப்பிடும்போது நோக்கியா லூமியா 920 போன் 5 மடங்கு அதிகமான லைட்டை உள்வாங்கும் திறன் கொண்டது, மேலும் பிளாஷ் பயன்படுத்தவேண்டிய தேவையில்லை.

இரவிலும் பிரகாசமான படங்களை எடுக்கவும், உள்ளரங்கில் வீடியோவும் பிராமாதமாக வரும் என்று நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அனைத்திற்கும் மேலாக இது ஒரு ஒயர்லெஸ் சார்ஜிங் வசதி உடைய ஸ்மார்ட் போனாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்