பட்ஜெட் விலையில் டூயல் சிம் ஆண்ட்ராய்ட் போன் - செல்கான் ஏ101

வெள்ளி, 23 ஆகஸ்ட் 2013 (20:00 IST)
FILE
பட்ஜெட் விலையில் இரண்டு சிம் இயக்கத்தில் ஏ101 என்ற ஆண்ட்ராய்ட் போன் செல்கான் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. செல்கான் ஏ101 போனின் அதிக பட்ச விலை ரூ.6,799/-

இரண்டு பேண்ட் அலைவரிசையில் இது இயங்குகிறது. இதில் ஆண்ட்ராய்ட் 4.0 ஐஸ்கிரீம் சாண்ட்விச் ஓ.எஸ். தரப்பட்டுள்ளது. பார் டைப் வடிவில் உள்ள இந்த மொபைல் போனில், கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், 4 அங்குல அகலத்தில் தரப்பட்டுள்ளது.

லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், நெட்வொர்க் இணைப்பிற்கு ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், 3ஜி, புளுடூத், டபிள்யு லான் ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன.
FILE

இதன் கேமரா 5 எம்.பி. திறன் கொண்டதாக, டிஜிட்டல் ஸூம், ஆட்டோ போகஸ் மற்றும் ப்ளாஷ் லைட்டுடன் தரப்பட்டுள்ளது. இதன் சிபியு 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ், இன்ஸ்டண்ட் மெசஞ்சர், இமெயில் வசதிகள் தரப்பட்டுள்ளன.

எம்பி 3 மற்றும் எம்பி 4 பிளேயர்கள் இயங்குகின்றன. எப்.எம். ரேடியோ, டார்ச் லைட், கூகுள் பிளே ஸ்டோருக்கான இணைப்பு தரப்பட்டுள்ளன. இதன் பேட்டரி 1,400 mAh திறன் கொண்டதாக உள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.6,799/-

வெப்துனியாவைப் படிக்கவும்