திருக் குர் ஆன் வலியுறுத்தும் கடமைகள்

செவ்வாய், 8 டிசம்பர் 2015 (17:13 IST)
திருக் குர் ஆன் வலிறுத்தும் தாய், தந்தை மற்றும் உறவினர்களின் உரிமைகளும், கடமைகளும் பற்றி பார்ப்போம்.


 

 
1.தாய், தந்தையாருடனும் உறவினர்களுடனும் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.
 
2. உறவினர்களுக்கு உங்களுடைய பொருளைச் செலவு செய்யுங்கள்.
 
3. உறவினர்களின் உரிமையை நிறைவேற்றுங்கள்.
 
4. அநாதைகள், வறியவர்கள், வழிப் போக்கர்கள் ஆகியோருக்கு உங்களுடைய பொருளைச் செலவு செய்யுங்கள்.
 
5. அநாதைகளுக்கு உரிய பொருட்களை அவர்களிடம் ஒப்படையுங்கள்.
 
6. பசித்தவருக்கு உணவு அளிப்பது, அவர் அநாதையான உறவினரானாலும், ஏழையானாலும் சரி, அது பெரியதொரு நற்பணியாகும்.
 
7. அநாதைகளை விரட்டுவது, ஏழைகளுக்கு உணவு அளிக்கும்படி மகளுக்கு ஆர்வமூட்டாமல் இருப்பது ஆகியவை பெரியதொரு துர்பாக்கியம் ஆகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்