இஸ்லாமியர்களின் 5 முக்கிய கடமைகளில் நோன்பும் ஒன்று. சூரியன் உதிப்பதற்கு முன்பிருந்து, அது மறைவது வரை பட்டினியாக இருந்து பொழுதைக் கழிக்கும் வெறும் விரதமல்ல அது. மருத்துவம், வாழ்க்கை தத்துவம், அனுபவம், படிப்பினை, வழிபாடு அது. உண்ணாமலும், உறங்காமலும், உடலுறவு கொள்ளாமலும், அருந்தாமலும் இருப்பது வெறும் உடலியல் கட்டுப்பாடு. அதைத் தாண்டியும் அற்புதமான விஷயங்கள் ரமலான் மாதத்துக்குச் சொந்தமானவை.
“ரமலான் மாதம் எத்தகையது என்றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் நேரான வழியை தெளிவாக்க கூடியதுமாகவும் உள்ள திருகுர்ஆன் அருளப்பட்டது. ஆகவே, உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும்” (அல்குர்ஆன் 2:185) என்கிறது திருக்குர்ஆன்.
“இஸ்லாத்தின் தூண்களில் ஒன்று நோன்பு. வணக்கங்களில் முதன்மையானது” என்பார் முகம்மது நபி. அவ்வளவு ஏன்... “நோன்பு அது எனக்கே உரியது. அது என் இயல்பு” என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். “நாம் செய்த தவறுகளுக்காகவும், நிறைவேற்ற இயலாத கடமைக்காகவும் கழிவிரக்கம் கொள்ளும் வகையில் நோன்பு நோற்பவர்களும் உண்டு. காரணம் இது பாவங்களை மன்னிக்கும் மாதம்” என்பார் முகம்மது நபி.
“ரமலான் மாதம் எத்தகையது என்றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் நேரான வழியை தெளிவாக்க கூடியதுமாகவும் உள்ள திருகுர்ஆன் அருளப்பட்டது. ஆகவே, உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும்” (அல்குர்ஆன் 2:185) என்கிறது திருக்குர்ஆன். “இஸ்லாத்தின் தூண்களில் ஒன்று நோன்பு. வணக்கங்களில் முதன்மையானது” என்பார் முகம்மது நபி. அவ்வளவு ஏன்... “நோன்பு அது எனக்கே உரியது. அது என் இயல்பு” என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். “நாம் செய்த தவறுகளுக்காகவும், நிறைவேற்ற இயலாத கடமைக்காகவும் கழிவிரக்கம் கொள்ளும் வகையில் நோன்பு நோற்பவர்களும் உண்டு. காரணம் இது பாவங்களை மன்னிக்கும் மாதம்” என்பார் முகம்மது நபி.
நோன்பாளிகளுக்கு மட்டுமல்ல, அதற்ககு உதவி செய்பவர்களுக்கும் இதுதான் உகந்த காலம். நோன்பு திறக்க உணவளிப்பவர்களுக்கு பாவ மன்னிப்பு கிடைக்கும், நரக நெருப்பிலிருந்து விடுதலை கிடைக்கும். இறைவன் மூன்று பேர்களின் பிரார்த்தனைகளை(துஆ) உடனடியாக ஏற்றுக் கொள்வான். நோன்பாளிகள், நீதி வழி தவறாத அரசன், அநீதி இழைக்கப்பட்டவன். இவர்களே அந்த மூவர். நோன்பு நோற்பதால் உடலாலும், மனதாலும் அற்புத மாற்றங்களை உணர முடியும். “ரமலான் வந்து விட்டால் முகம்மதுவின் உடல் நிறம் மாறிவிடும். அதிக நேரம் தொழுவார், கெஞ்சி பணிந்து பிரார்த்தனை செய்வார்” என்று அண்ணல் நபி பற்றி ஆயிஷா அறிவிக்கிறார்.
நோன்பால் 5 அற்புதங்கள் நிகழும் என நபி குறிப்பிடுகிறார். 1. நோன்பாளியின் வாய்நாற்றம் இறைவனிடம் கஸ்தூரி மணமாக மாறும். 2. நோன்பாளிகளுக்காக கடல் மீன்கள் பிரார்த்தனை செய்யும். 3. அவர்களுக்காக சொர்க்கம் அலங்கரிக்கப்படும். 4. தொல்லை தரும் சைத்தான்கள் விலங்கிடப்படும். 5. கடைசி இரவில் நோன்பாளிக்கு மன்னிப்பு அளிக்கப்படும்.
இவை எல்லாவற்றையும் விட ரமலான் மாதத்துக்கு இஸ்லாத்தையும் தாண்டி பல சிறப்புகள் உண்டு.
இப்ராஹிம் நபிக்கு (ஆபிரஹாம்) ரமலான் மாதம் முதல் நாள்தான் ‘ஸுஷ்பு’ எனும் ஆகமம் அருளப்பட்டது. அதிலிருந்து 700 ஆண்டுகளுக்குப் பிறகு மூசா நபிக்கு (மோசஸ்) ‘தவுராத்’ வேதம் ரமலான் 6ஆம் நாள் அருளப்பட்டது. 500 ஆண்டுகளுக்குப் பிறகு தாவூத் நபிக்கு ‘ஸபூர்’ வேதம் அருளப்பட்டது. இதிலிருந்து 1200 ஆண்டுகள் கழித்து ஈசா நபிக்கு (ஜீசஸ்) ‘இன்ஜீல்’ வேதம் ரமலான் 18ம் நாள் அருளப்பட்டது.
600 ஆண்டுகளுக்குப் பிறகு ரமலான் மாதம் 27ஆம் நாள் முகம்மதுவுக்கு ‘திருக்குர்ஆன்’ அருளப்பட்டது. ஆகவே, ரமலான் வேதங்கள் இறங்கிய மாதமாக கொண்டாடப்படுகிறது.