ஆனால் மும்பை அணி பந்துவீச்சினால் கொல்கத்தாவை மடக்கியது.
கொல்கத்தா அணியின் ராகுல் திரிபாதி 5 ரன்களுக்கு அவுட் ஆனார். ராணா பொறுப்பாக விளையடி 70 ரன்கள் அடித்து அணியைக் காப்பாற்றினார். இறுதிக்கட்டத்தில் 4 ஓவர்களில் வெற்றிக்கு 30 ரனகள் வேண்டி இருந்தது. கடைசி ஓவரில் 2 பந்துகளில் 13 ரன்கள் தேவைப்பட்டது.இதில் ஹர்பஜன் சிங் 2 ரன்கள் எடுத்தார். கடைசிப்பந்தில் ரன் எடுக்கவில்லை.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா ரைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணியில் சாஹர் 4 விக்கெட்டுகளும், போல்ட் 2 விக்கெட்டுகளும், பாண்டியா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.