ஐபிஎல்-2021; பெங்களூர் அணிக்கு 150 ரன்கள் வெற்றி இலக்கு
புதன், 29 செப்டம்பர் 2021 (21:36 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 43வது போட்டி இன்று துபாயில் நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டி இன்று இரவு ஏழு முப்பது மணிக்கு தொடங்கியது.
முதலில் டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் கோலி பீல்டிங் தேர்வு செய்தார். எனவே முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 149 ரன்கள் எடுத்து 150 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
ராஜஸ்தான் அணியில் ஏவின் லெவிஸ் 58 ரன்கள் எடுத்துள்ளார். பெங்களூர் அணியில் ஹர்சல் படேல் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.