ஐபிஎல் போட்டிகள் விருவிருப்பாக நடந்து வந்த நிலையில் கொல்கத்தா அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா உறுதியான நிலையில் நேற்றைய ஆட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை சூபர் கிங்ஸ் அணி நிர்வாக இயக்குனர், பந்துவீச்சு பயிற்சியாளர் உள்ளிட்டோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளை மொத்தமாக மகாராஷ்டிராவிலேயே நடத்தி விட மகாராஷ்டிரா அரசின் அனுமதியை பிசிசிஐ கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் சிஎஸ்கே அணியில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் நாளைய சிஎஸ்கே – சன்ரைஸர்ஸ் போட்டிகளை ஒத்திவைக்கலாமா என்பது குறித்தும் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.