கடந்த ஆண்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறவில்லை. ஆனால் இம்முறை சேப்பாக்கம் மைதானத்தில் 7 லீக் ஆட்டங்கள் நடக்கிறது. அதன்படி சென்னை சூப்பர் சிங்ஸ் அணி ஏப்ரல் 9 அன்று இரவு 8 மணியளவில் டெல்லியுடன் மோதுகிறது. மேலும் ஏப்ரல் 11 சுமார் 4 மணியளவில் ஐதராபாத் அணியுடன் பலப்பரிட்சை நடத்துகிறது.
ஏப்ரல் 25 இரவு 8 மணிக்கு பஞ்சாப்புடன் மோதவுள்ளது. மேலும் ஏப்ரல் 30 இரவு 8 மணிக்கு கொல்கத்தாவுடன் பலப்பரிட்சை நடத்தவுள்ளது. மேலும் மே 4 அன்று பெங்களூருடனும், மே 8 மும்பையுடனும், மே 10 அன்று ராஜஸ்தான் அணியுடனும் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.