ரெய்னா அதிரடி, 27 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி

வியாழன், 23 ஏப்ரல் 2015 (09:30 IST)
பெங்களூருவில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டின் நேற்றய 2 ஆவது போட்டியில் சென்னை-பெங்களூர் அணிகள் மோதின இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


 

 
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் நேற்றய 2 ஆவது போட்டியில் சென்னை - பெங்களூர் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. ரெய்னாவின் அதிரடி ஆட்டத்தால் சென்னை அணி 181 ரன்கள் எடுத்தது. ரெய்னா 32 பந்தில் 62 ரன்கள் குவித்தார்.
 
இதைத் தொடர்ந்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களம் இறங்கியது. பிஸ்லாவும், ரஸ்ஸவும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் அதிரடியாக விளையாடினர் பெங்களூர் அணி 3 ஓவருக்கு 31 ரன்கள் குவித்தது.
 
இந்நிலையில்,  4 ஆவது ஓவரை நெக்ரா வீசினார். இந்த ஓவரில் அவர் பிஸ்லா (17), ரஸ்ஸவ் (14) இருவரையும் வீழ்த்தினார். அதன்பிறகு பெங்களூர் அணியால் தொய்வடைந்தது, தினேஷ் கார்த்திக் 10 ரன்னிலும், டி வில்லியர்ஸ் 14 ரன்னிலும், சர்பிராஸ் கான் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
 
விராட் கோலி நிலையாக நின்று விளையாடினார். இருந்தாலும் அவரால் அதிரடியாக விளையாட முடியவில்லை. இதனால் பெங்களூர் அணி 15 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 5 ஓவரில் 71 ரன்கள் தேவைப்பட்டது. ஜடேஜா வீசிய 16 ஆவது ஓவரில் 12 ரன்கள் கிடைத்தது. இதனால் பெங்களூர் அணிக்கு 24 பந்தில் 59 ரன்கள் தேவைப்பட்டது. 17 ஆவது ஓவரை நெக்ரா வீசினார்.
 
இந்த ஓவரின் முதல் பந்தில் கோலி அவுட் ஆனார். அவர் 42  பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 51 ரன்னை எடுத்தார். அடுத்து பட்டேல் களம் இறங்கினார். இவர் ரன் ஏதும் எடுக்காமல் அடுத்த பந்தில் டக் அவுட் ஆனார். அடுத்து ஸ்டார்க் களம் இறங்கினார். 17 ஆவது ஓவரில் ஒரே ஒரு ரன் மட்டும் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட் வீழ்த்தி நெக்ரா அசத்தினார்.
 
இதைத் தொடர்ந்து, 18 ஆவது ஓவரை பிராவோ வீசினார். இந்த ஓவரில் பெங்களூர் அணி 10 ரன்கள் எடுத்தது. 19 ஆவது ஓவரை மோகித் சர்மா வீசினார். இந்த ஓவரில் 13 ரன்கள் எடுத்தது. கடைசி 6 பந்தில் 35 ரன்கள் என்ற இக்கட்டான இலக்குடன் ஆடிய பெங்களூர் அணியால் 7 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்