இந்நிலையில் போட்டி குறித்து சென்னை அணியின் பயிற்சியாளர் பிளமிங் கூறுகையில், இன்றைய போட்டியில் மும்மை அணி சொந்த மண்ணில் பங்கேற்கிறது. எனவே கடந்த போட்டிகளை காட்டிலும் இப்போட்டி முற்றிலும் மாறுப்பட்டது. மும்பை அணி தொடர் தோல்விகளை சந்தித்தாலும் அவ்வணியை குறைத்து மதிப்பிட முடியாது. கோப்பையை வெல்ல ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பாக பங்காற்றுவோம் என்றார்.