சென்னை சூப்பர் கிங்ஸ் 142/7 (20 ஓவர்)

வியாழன், 22 ஏப்ரல் 2010 (21:49 IST)
மும்பையில் நடைபெற்றுவரும் ஐ.பி.எல். கிரிக்கெட் இரண்டாவது அரையிறுதியில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ச் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் என்று மட்டுபடுத்தப்பட்டது.

கடைசியில் அனுரூதா ஸ்ரீகாந்த் 15 பந்துகளில் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் சகிதம் 28 ரன்கள் எடுத்ததால் கடைசி 5 ஓவர்களில் 46 ரன்கள் எடுத்து இந்த நிலையை எட்ட முடிந்தது.

துக்கத்தில் ரியான் ஹேரிஸ் அபாரமாக வீசினார். ஹெய்டனுக்கு தொடர்ச்சியாக இரண்டு எளிதான கேட்ச்கள் கோட்டைவிடப்பட்டும் அந்த வாய்ப்புகளை அவர் தனக்கு சாதகமாக மாற்றாமல் கடைசியில் மோசமான ஷாட் தேர்வுக்கு பலியானார்.

ஹேரிஸ் அடுத்த படியாக முரளி விஜயையும் சொற்ப ரன்களுக்கு வீழ்த்தினார். இவர் ஒரு 4, ஒரு 6-உடன் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக சென்னைசூப்பர் கிங்ஸின் நம்பிக்கை நட்சத்திரம் ரெய்னா 2 ரன்களுக்கு சைமன்ட்ஸ் பந்தில் மட்டமான ஷாட்டிற்கு ஆட்டமிழந்தார்.

தோனியும், பத்ரிநாத்தும் சேர்ந்தனர். ஆனால் பத்ரிநாத் அதிகபட்சமாக 37 ரன்கள் எடுத்தாலும் அதற்கு அவர் 41 பந்துகளை எடுத்துக் கொண்டார்.

தோனியும் இவரும் இணைந்து 8 ஓவர்களில் 53 ரன்களையே சேர்க்கமுடிந்தது இதில் தோனி 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவர் விக்கெட்டை ஹர்மீத் சிங் வீழ்த்தினார்.

மோர்கெல் நல்ல ஷாட் அடித்தும் சைமன்ட்ஸ் அதனை திறமையாகப் பிடிக்க 4 ரன்களில் இவர் ஓஜாவிடம் வீழ்ந்தார்.

96/5 என்று ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி 5 ஓவர்களில் 46 ரன்கள் எடுத்தது. ரியான் ஹேரிஸ் 4 ஓவர்களில் 29 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்