2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சில முக்கிய சாதகங்கள் இந்திய அணிக்கு கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சூர்யகுமார் யாதவ் மற்றும் ருத்ராஜ் ஆகியோர்களின் அபாரமான பேட்டிங் மற்றும் நடராஜனின் அபாரமான பந்து வீச்சு வெளிப் பட்டுள்ளது. இவர்கள் மூவருமே அடுத்து இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளவர்களாக கருதப்படுகின்றனர்
இந்த நிலையில் ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர், நடராஜனிடம், நீங்கள் ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள் அங்கு நாம் சந்திப்போம் என்று தெரிவித்துள்ளார். இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் தீவிரமாக முயற்சி செய்தும் நூலிழையில் வெற்றியை கோட்டை விட்டு ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: