பெங்களூர் vs ராஜஸ்தான்: முதல் வெற்றி யாருக்கு?

செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (21:17 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சமீபத்தில் தொடங்கிய நிலையில் பெங்களூர் அணியும், ராஜஸ்தான் அணியும் தலா மூன்று போட்டிகளில் விளையாடி மூன்றிலும் தோல்வி அடைந்துள்ளது. இந்த நிலையில் இன்று இந்த இரு அணிகள் மோதுவதால் இரண்டு அணிகளில் ஒரு அணிக்கு முதல் வெற்றி உறுதியாகின்றது. அந்த முதல் வெற்றி யாருக்கு என்பது இன்னும் சிலமணி நேரங்களில் தெரிந்து விடும்
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்ததால் முதலில் பெங்களூரு அணி பேட்டிங் செய்தது. இதில் வழக்கம்போல் கேப்டன் விராத் கோஹ்லி 23 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார். இருப்பினும் தொடக்க ஆட்டக்காரரான பார்த்திவ் பட்டேல் 61 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். பெங்களூர் அணி 20ஓவர்களில் 40விக்கெட்டுக்களை இழந்து 1540ரன்கள் எடுத்துள்ளது. பார்த்திவ் பட்டேல் 67 ரன்களும், ஸ்டோனிஸ் 31 ரன்களும் எடுத்தனர்.
 
ராஜஸ்தானை சேர்ந்த கோபால் தான் மூன்று விக்கெட்டுக்களையும் ஆர்ச்சர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர் கோபால் நான்கு ஓவர்கள் பந்துவீசி அதில் ஒரு மெய்டன் ஓவர் வீசி 12 ரன்கள் மட்டுமே கொடுத்து மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்