வங்கதேச கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் தமீம் இக்பால் தொடர்ந்து அவரது பாணி லாவகமான ஆட்டத்திற்காக வங்கதேச ஊடகங்களால் விமர்சிக்கப்பட்டு வருபவர்.
2007 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமீம் இக்பால் ஆடிய இன்னிங்ஸ் இந்திய அணியை வெளியேற்றியது. ஜாகீர் கான், முனாப் படேல் ஆகியோரை அவர் அன்று கையாண்ட விதம் இன்றும் அன்றைய கேப்டன் ராகுல் திராவிடிற்கு புளியைக் கரைக்கும்.
அவர் சீரான முறையில் ரன்களை எடுக்கும்போதும் அணிக்குள் வந்து வந்து போவார். இதுதான் அவரது நிலை.
தன் ஆட்ட பாணியில் அவர் பாகிஸ்தான் முன்னாள் துவக்க வீரரும் இந்திய பந்து வீச்சாளர்களை அப்போது பதம் பார்த்தவருமன சயீத் அன்வரை ஒத்திருப்பார்.
இந்த நிலையில்...
FILE
தனது ஆக்ரோஷமான அணுகுமுறை குறித்து விமர்சனனங்கள் எழுந்து வரவே அவர் கடுப்பாகி ஒரு கருத்தைக் கூற வேண்டியதாயிற்று.
"ஒருநாள் இப்படித்தான் யோசித்தேன். நல்லவேளையாக சேவாக் வங்கதேசத்தில் பிறக்கவில்லை. அதற்காக நான் கடவுளுக்கு நன்றி கூறுவேன். அப்படி சேவாக் இங்கு பிறந்திருந்தால் அவர் எப்போதோ கிரிக்கெட் ஆட்டத்தை மறந்தே போயிருப்பார்" என்று கூறியுள்ளார்.
உள்ளூர சேவாக் ஆட்டத்தை ரசித்திருக்கிறார் தமிம் இக்பால். அதனால்தான் அந்தப் பாணியை கடைபிடிக்கிறார். ஆனால் வங்கதேச கிரிக்கெட் அணி வளர்ந்து வரும் ஒரு அணி எனவே இவரைப்போன்ற ஒரு வீரர் ஆக்ரோஷமாக ஆடி விரவில் ஆட்டமிழந்தால் அது அணியை கடுமையாக பாதிக்கிறது.
எனவே அவரது பாணியை எதிர்த்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.