ரெய்னாவுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்ட பூர்ணா படேல், சாக்ஷி தோனியின் ஜிகிரி தோஸ்த்!

வெள்ளி, 10 ஜனவரி 2014 (14:58 IST)
இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுடன் கிசுகிசுக்கப்பட்ட இந்த பூர்ணா படேல் யார் தெரியுமா? மத்திய மந்திரி பிரஃபுல் படேலின் மகள்தான்.
FILE

சுரேஷ் ரெய்னாவுடன் சேர்த்து இவர் பெயர் அடிப்பட்டபோது இவருக்கு ஒரு முக்கிய அந்தஸ்தே வட இந்திய மீடியாக்களில் கிடைத்தது.

சீரடியில் ஒருமுறை பூர்ணா படேலுடன்...

சுரேஷ் ரெய்னாவைப் பார்த்த பபராஸி வட இந்திய ஊடகங்கள் படார் படாரென்று போட்டோவை கிளிக்கின.
FILE

அவ்வளவுதான் உடனே ரெய்னா, பூர்ணா படேல் காதல் என்று ஆங்காங்கே நாக்குகள் சுழலத் தொடங்கி விட்டன.

ஆனால் சுரேஷ் ரெய்னாவுடன் தனது ஸ்னேகம் பற்றி பூர்ணா படேல் வாயைத் திறந்ததில்லை. இருந்தாலும் பத்திரிக்கைகள்தான் எப்பவும் கூறுமே ஒரு வார்த்தை: நெருப்பில்லாமல் புகையுமா?

ஆனால் பூர்ணா படேல் இந்திய கேப்டன் தோனியின் மனைவி சாக்ஷி தோனியின் ஜிக்ரி தோஸ்தாம். தோனியின் மனைவி பார்ட்டிகளில் தோன்றிவருவது தற்போது வட இந்திய ஊடகங்களில் பிரசித்தமாக இருந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்