ரசிகைகள் பற்றி சச்சின் 17 வயதில் கூறியது என்ன?

வியாழன், 7 நவம்பர் 2013 (15:48 IST)
FILE
1990ஆம் ஆண்டு நியூ இன்டியன் எக்ஸ்ப்ரஸ் பத்திரிக்கையின் கிரிக்கெட் நிருபர் என். ஜகனாத் தாஸ் ஒரு சுவையான கேள்வி பதில் மெனுவை சச்சின் டெண்டுல்கரிடம் கொடுத்தார். அதனை சச்சின் தன் சொந்தக் கையெழ்த்திலேயே பூர்த்தி செய்து கொடுத்தார்.

அந்த கேள்வி பதில் மெனு இதோ:
FILE

அதில் சச்சின் உங்களது பெண் ரசிகைகள் பற்றி என்ற கேள்விக்கு நேராக சச்சின் டெண்டுல்கர் கூறியது இதுதான்:

"அவர்கள் எப்போது எனது போட்டோகிராபையும், ஆட்டோகிராபியுமே விரும்புகிறார்கள்" என்றார்.

பிடித்த நடிகை என்ற இடத்தில் மாதுரி தீட்சித் பெயரை அவர் அப்போது குறிப்பிட்டிருந்தார்.

பிடித்த பாடகர் பாடகி என்ற இடத்தில், லதா மங்கேஷ்கர், கிஷோர் குமார் என்று குறிப்பிட்டிருந்தார். தனக்கு பிடித்த குரு என்ற இடத்தில் அவரது கிரிக்கெட் பயிற்சியாளர் அச் ரேக்கர் பெயரை குறிப்பிட்டார் சச்சின். காரணம் அப்போது அவர் சொன்னது" ஏனெனில் அவர் எந்த பேட்ஸ்மெனின் இயல்பான ஆட்டத்தையும் மாற்ற முயற்சிப்பதில்லை" என்றார்.

அப்படி பேசிய சச்சின் இன்று இயல்பான ஆட்டத்தை மறந்து பம்மத் தொடங்கினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்