பிரிஸ்பன் மைதானத்திற்குள் பன்றி! ரசிகர் கைது!

வெள்ளி, 22 நவம்பர் 2013 (15:28 IST)
ஆஷஸ் டெஸ்ட் தொடர் என்பது இருநாடுகளுக்கும் இடையேயுள்ள பகைமையின் சின்னமகவே மாறி விட்டது. ஆஸ்ட்ரேலிய ரசிகர்களும், ஊடகங்களும் நாகரீகம் என்றால் கிலோ என்னவிலை என்று கேட்கும் அளவுக்கு அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளது.
FILE

இன்று பிரிஸ்பன் மைதானத்தில் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் 2ஆம் நாள் ஆட்டத்தில் குழந்தையைக் கொண்டுவருவதுபோல் மறைத்து பன்றி ஒன்றை கொண்டுவந்துள்ளார் ரசிகர் ஒருவர். ஸ்டூவர்ட் பிராட் கடந்த ஆஷஸ் தொடரில் எட்ஜ் ஆகி அவுட் ஆகியும் வெளியேறாமல் நின்று அரை சதம் அடித்தார் ஆஸ்ட்ரேலியா தோல்வியடைந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது.

இந்த நிலையில் இன்று பன்றியை மைதானத்திற்கு கொண்டுவனதவர் பிராட் என்ற பெயரை பன்றியின் உடலில் எழுதி கொண்டு வந்து அதனை உரிய நேரத்தில் மைதானத்தில் விரட்டி விட தயாராக இருந்திருக்கலாம் என்று மைதான அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்த அநாகரீகம் இப்போது நடப்பதல்ல, ஏற்கனவே

FILE
ஏற்கனவே 1982- 83 ஆஷஸ் தொடரின் போதூ தெருப்பன்றி ஒன்றைப் பிடித்து அதன் மீது ஒரு புறம் இயன் போத்தம் என்றும் மறுபுறம் எடி ஹெமிங்ஸ் என்றும் எழுதப்பட்டு இதே பிரிஸ்பன் மைதானத்திற்குக் கொண்டுவரப்பட்டது நிகழ்ந்துள்ளது.

அப்போது ஒருநாள் போட்டியில் அந்தப் பன்றியை மைதானத்தில் ஓட விட்டு அநாகரீகத்தை ரசித்தனர் ஆஸ்ட்ரேலிய ரசிகர்கள்.

ஆனால் இந்த முறை பன்றியைக் கொண்டு வந்த வெறியன் வெற்றியடையவில்லை. சந்தேகம் கொண்ட கண்கள் இந்த நபரைப்பற்றி போலீசில் கூற அவர்கள் அவரைப் பிடித்தனர். பன்றியை நீண்ட நேரம் மூடி வைத்திருந்ததால் அது நோய்வாய்ப்பட்டது.

அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட அதே நேரம், இந்த வெறியர் மீது விலங்குகளுக்கு கொடுமை இழைக்கும் குற்றப்பிரிவில் புகார் பதிவு செய்யப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்