தினேஷ் கார்த்திக்- தீபிகா பல்லிக்கல் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது
வியாழன், 28 நவம்பர் 2013 (13:29 IST)
FILE
இந்திய அணியிலிருந்து தொடர்ந்து ஒழிக்கப்பட்டு வரும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் தினேஷ் கார்த்திக்கிற்கும் ஸ்குவாஷ் விளையாட்டுச் சாம்பியன் தீபிகா பல்லிக்கல்லிற்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
இருவருக்கும் கடந்த வாரம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. பெரிதாக விளம்பரப்படுத்தாமல் இந்த நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
தீபிகாவின் தாயார் இதனை உறுதி செய்தார். ஆனால் நிச்சயதார்த்த நிகழ்ச்சியை குடும்ப அளவில் செய்து முடித்ததாக அவர் கூறினார்.