'கோலி என்னைத் திருமணம் செய்து கொள்'- ட்விட்டரில் இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை!
சனி, 5 ஏப்ரல் 2014 (13:37 IST)
நேற்று ஐசிசி உலகக் கோப்பை T20 கிரிக்கெட் அரையிறுதியில் சற்றும் பதட்டப்படாமல் சுலபமாக இலக்கைத் துரத்தி வெற்றிபெறச் செய்த கோலிக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் வீராங்கனை டேனியல் வியாட், தனது ட்விட்டரில் "கோலி என்னைத் திருமணம் செய்து கொள்" என்று ட்வீட் செய்திருந்தாஅர்.
அதிலும் Kohli என்ற ஸ்பெல்லிங்கை அவர் kholi என்று குறிப்பிட்டதும், காமெடியான பல எதிர்வினைகளை ட்விட்டரில் தூண்டியுள்ளது.
சிலர் இல்லை இல்லை கோலி ஏற்கனவே புக் ஆகிவிட்டார் என்று தமாஷாக பதிலிட்டுள்ளனர்.
கோலிக்கு இது நடப்பது முதல் முறையல்ல. மைதானங்களில் ஆட்டம் நடைபெறும்போது பெண்கள் பலர் கோலியின் மீதான தங்கள் ஆசையை இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
டேனியல் வியாட் ஒரு வலது கை நடுக்கள பேட்டிங் வீராங்கனை பந்து வீச்சில் ஆஃப் பிரேக் பவுலர்.
ஆஃப் பிரேக் செய்யலாம் இளம் வீரரின் ஹார்ட் பிரேக் செய்யலாமா?