400 சிக்சர்கள்! அப்ரீடியின் சாதனை (வீடியோ)

திங்கள், 29 ஜூலை 2013 (17:30 IST)
சிக்சர்களின் மன்னன் என்றே கூறிவிடலாம் ஷாகித் அப்ரீடியை! சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த சனிக்கிழ்மையன்று தனது 400வது சிக்சரை அடித்து புதிய சாதனை படைத்தார் அவர்.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடைபெற்ற முதல் T20 கிரிக்கெட் போட்டியில் 152 ரன்களை துரத்தியபோது ஆட்டத்தின் 16வது ஓவரில் சுனில் நரைன் பந்தை மேலேறி வந்து ஒரு புரூட்டல் சிக்சரை அடித்தார் அப்ரீடி. அதுதான் அவரது 400வது சிக்சர்.


நன்றி: டியூப்

அதிக சிக்சர்களை விளாசிய வீரர்கள் பட்டியல் வருமாறு:

FILE
கிறிஸ் கெய்ல் 353 சிக்சர்கள்

சனத் ஜெயசூரியா - 352

பிரெண்டன் மெக்கல்லம் - 277

சச்சின் டெண்டுல்கர் - 264

ஆடம் கில்கிறிஸ்ட் - 262

ஜாக் காலிஸ் - 253

தோனி - 249

சௌரவ் கங்கூலி - 247

ரிக்கி பாண்டிங் - 246

வெப்துனியாவைப் படிக்கவும்