சச்சின் டெண்டுல்கர் உலகிலேயே அதிக ரன்கள் எடுத்தவர், அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர், ஒருநாள் போட்டியில் முதன் முதலில் இரட்டை அடித்தவர் போன்ற விஷயங்கள் இருக்க அவர் சாதிக்காத 8 விஷயங்கள் இருக்க்வே செய்கின்றன.
FILE
அதனையும் அவர் செய்திருந்தால் ஒரு முழுமையான கிரிக்கெட் வீரராக அவர் மேலும் உயர்வு பெற்றிருப்பார்.
அவர் சாதிக்காத 8 சமாச்சாரங்கள் என்னன்ன?
1. சச்சின் டெண்டுல்கரின் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் 248 நாட் அவுட். ஆனால் பிரையன் லாராவின் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் 400, முதல் தர கிரிக்கெட்டில் லாராவின் அதிகபட்ச ஸ்கோர் 500 ரன்கள்!!
2. கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் சச்சின் டெண்டுல்கர் சதம் எடுத்ததேயில்லை.
FILE
3. சச்சின் டெண்டுல்கர் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 6 முறை இரட்டைச் சதம் எடுத்துள்ளார். ஆனால் ஒருமுறை கூட முச்சதம் கண்டதில்லை.
4. ஒரு டெஸ்ட் தொடரில் சச்சின் டெண்டுல்கர் 500 ரன்கள் எடுத்ததில்லை. அவர் அதிகபட்சமாக ஒரு டெஸ்ட் தொடரில் 493 ரன்களையே எடுத்துள்ளார், மாறாக கவாஸ்கர் தன் முதல் தொடரிலேயே 700க்கும் மேற்பட்ட ரன்களை அடித்திருக்கிறார், திலிப் சர்தேசாய் 612 ரன்கள் எடுத்திருக்கிறார். மொகிந்தர் அமர்நாத் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஒரே தொடரில் 598 ரன்கள் எடுத்துள்ளார். ராகுல் திராவிட் இங்கிலாந்துக்கு எதிராக 500 ரன்களை கடந்து சென்றுள்ளார். ஆனால் சச்சின் டெண்டுல்கர் 500ஐ எட்டவில்லை. டான் பிராட்மேன் ஒரே தொடரில் 974 ரன்கள் எடுத்ததே இன்று வரை உலக சாதனை.
FILE
5. அதேபோல் ஒரு கால்ண்டர் ஆண்டில் சச்சின் டெண்டுல்கர் அதிகபட்சமாக 1,562 ரன்களையே எடுத்துள்ளார். இதில் சச்சினை விட அதிகம் எடுத்தவர் பாகிஸ்தானின் மொகமது யூசுப்; இவர் 1,788 ரன்கள் எடுத்துள்ளார்.
FILE
6. அதேபோல் சச்சின் டெண்டுல்கர் ஒரே டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் கண்டதில்லை. பாண்டிங் 3 முறை இதனை சாதித்துள்ளார், கவாஸ்கர் 3 முறை சாதித்துள்ளார், ஆலன் பார்டர், லாரி கோம்ஸ் ஆகியோர் தலா ஒரு முறை சாதித்துள்ளனர்.
FILE
7. 3 டெஸ்ட்களில் தொடர்ச்சியாக சச்சின் சதம் கண்டதில்லை.
FILE
8. அதேபோல் சச்சின் டெண்டுல்கர் ஒரே டெஸ்ட் தொடரில் 3 சதங்கள் அடித்ததில்லை. ராகுல் திராவிட் இங்கிலாந்துக்கு எதிராக இருமுறை இதனைச் சாதித்துள்ளார்.