பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுடன் வீரத் கோலி நெருக்கம்?
செவ்வாய், 29 அக்டோபர் 2013 (17:08 IST)
இந்தியாவில் கிரிக்கெட்டும், பாலிவுட்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தது. இந்த நிலையில் கிரிக்கெட் வீரர், நடிகை தொடர்பு பற்றி வதந்திகள் வரவே செய்யும். பலவேளைகளில் வதந்திகள் உண்மையாகவும் இருக்கக்கூடும்.
FILE
அதுபோன்ற ஒரு செய்திதான் பாலிவுட் ஸ்டார் அனுஷ்கா சர்மாவுடன் கோலி நெருங்கிய தொடர்பு வைத்துள்ளார் என்பதும்.
இருவருமே அவரவர் துறைகளில் வளரும் நட்சத்திரங்கள். விஷயம் எந்த அளவுக்கு போயிருக்கிறது என்றால்...
மேற்கு மும்பை, அந்தேரி பகுதியில் பத்ரிநாத் குடியிருப்பில் அனுஷ்கா சர்மாவுக்கு ஒரு ஆடம்பர பங்களா வீடு இருப்பதாகவும் அங்கு இருவரும் சந்திப்பதாகவும் செய்திகள் உலவுகின்றன.
FILE
குடியிருப்பில் வசிப்பவர்கள் அனுஷ்கா சர்மாவையும், வீரர்த் கோலியையும் குடியிருப்பு எலிவேட்டரில் அடிக்கடி பார்ப்பதாக தெரிவித்துள்ளதாக செய்திகள் உலவுகிறது.
அனுஷ்கா சர்மாவின் இந்த குடியிருப்பு கட்டிடத்தின் 15வது மாடியில் இருப்பதாகவும் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் அந்த குடியிருப்பு அமைக்கப்பட்டுள்ளதாம்.
ஷூட்டிங் மற்றும் பிற வேலைகள் முடிந்தபிறகு கிரிக்கெட் வீரரை...
அனுஷ்கா சர்மா தனது அபார்மெண்டிற்கு அழைப்பதாக கூறப்படுகிறது.
FILE
இவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக குடியிருப்பில் ஆங்காங்கே உலவுவது குடியிருப்பு வாசிகளிடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும் இந்தி செய்தி ஊடகம் ஒன்று கிசுகிசுக்கிறது.
சமயத்தில் கோலியின் கையிலிருக்கும் மட்டை ஏன் நழுவுகிறது என்பது புரிகிறது