நீ வெறும் ரசிகைதான்! சோபியாவை காயப்படுத்திய ரோகித் சர்மா!
திங்கள், 4 நவம்பர் 2013 (17:03 IST)
பெங்களூரில் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக முதன் முறையாக ஒருநாள் இரட்டை சதம் எடுத்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்திய ரோகித் சர்மாவின் தனிப்பட்ட வாழ்க்கையும் பல திருப்பங்கள் நிறைந்ததே.
FILE
பிரிட்டிஷ்-இந்திய மாடல் அழகி சோஃபியா ஹயாத் என்பவருடன் ரோகித் சர்மாவுக்கு காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இருவருமே தொடர்ந்து இதை மறுத்து வந்தாலும் தொடர்ந்து இருவரும் ஊர் சுற்றி வந்தனர். கேளிக்கை விருந்துகளில் சேர்ந்து வந்து பங்கேற்றனர்.
இருவரும் தற்போது நிரந்தரமாக...
பிரிந்து விட்டனர். காரணம் சோஃபியாவை ரோகித் ஒரு பெண் நண்பராக கூட அங்கீகரிக்கவில்லையாம். செய்தி சானல் ஒன்றில் சோஃபியா ஹயாத் ஒரு வெறும் ரசிகைதான் என்று ரோகித் கூறியது சோபியாவை எரிச்சல் படுத்தியுள்ளதாக இந்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனால் சோபியா ஆளை விடுடா சாமி என்று உறவை முறித்துக் கொண்டு விட்டாராம்.
FILE
ஒரு காலத்தில் சோபியாவுக்காக கிரிக்கெட் ஆட்டத்திற்கான தயாரிப்பையும் துறந்த ரோகித் சர்மா இப்போது ஒரு பெரிய ஸ்டாராக திகழ்வதற்கு இதுவும் ஒரு காரணம் என்று இந்தி ஊடகங்கள் கிசுகிசுக்கின்றன.