சச்சின் 200! வரலாற்று டெஸ்ட்- சுவையான புள்ளிவிவரங்கள்!
சனி, 16 நவம்பர் 2013 (17:14 IST)
சச்சின் ஓய்வு பெற்ற வரலாற்று தினம்! இதே நவம்பர் 16ஆம் தேதிதான் அவர் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் மட்டையைக் கையில் பிடித்து களமிறங்கினார். நவம்பர் 15ஆம் தேதி உண்மையான் டெபு தினம் என்றாலும் பேட்டிங் பிடித்தது 1989ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதிதான்!
FILE
தோனி தலைமையில் 6வது தொடர் டெஸ்ட் வெற்றியாகும் இது. இன்னிங்ஸ் வெற்றி பெறுவது 9வது முறையாகும். மொகமது அசாருதீன் 8 டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றார். இன்று அது முறியடிக்கப்பட்டது. கங்கூலி தன் தலைமையின் கீழ் 7 முறை இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளார். தோனி கேப்டனாக 49வது டெஸ்டில் பணியாற்றினார். கங்கூலியின் சாதனையை சமன் செய்துள்ளார்.
கிட்டத்தட்ட...
FILE
19ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தற்போது 21ஆம் நூற்றாண்டில்தான் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது. ஷில்லிங்போர்ட் தொடர்ச்சியாக ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பது 5வது முறையாகும். இதற்கு முன்னர் நிகழ்ந்ததெல்லாம் 19ஆம் நூற்றாண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில்தான்.
சந்தர்பால் அரைசதமே அடிக்காத தொடராகும் இது. இதற்கு முன்னர் இங்கிலாந்துக்கு எதிராக 2009 ஆம் ஆண்டு அரைசதமே எடுக்காமல் தொடரில் தோல்வி அடைந்துள்ளார்.
மேற்கிந்திய அணிக்கு இது மோசமான தோல்வியாகும். பேட்ஸ்மென்கள் அனைவரும் சேர்ந்து 19.27 ரகள் சராசரி. இது மேற்கிந்திய கிரிக்கெட் வரலாற்றில் 3வது மோசமான ஆட்டமாகும்.
நடந்து முடிந்த தொடரில் அஷ்வினின்
FILE
பேட்டிங் சராசரி 77. பவுலிங் சராசரி 19.33 . மேலும் அஷ்வின் சதம் எடுத்ததோடு தொடரில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தியாவுக்கு இது 11வது முறையாக நிகழ்வதாகும்.
முடிவு ஏற்பட்ட டெஸ்ட் போட்டியில் இந்தியா விளையாடிய மிகவும் குறைந்த ஓவர்களில் முடிந்த 2வது டெஸ்ட் போட்டியாகும் இது. மொத்தமே 216 ஓவர்கள்தான் வீசப்பட்டுள்ளது. 2004ஆம் ஆண்டு ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக மொத்தமே 202.1 ஓவர்தான் வீசப்பட்டது.
பிராக்யன் ஓஜா முதன் முறையாக டெஸ்ட் போட்டி ஒன்றில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 1994 ஆம் ஆண்டில் வெங்கடபதி ராஜு 1994ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பிறகு ஒரு இடது கை சுழற்பந்து வீச்சாளர் டெஸ்டில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது ஓஜாதான்.
ஹர்பஜன் சிங் 3 முறை ஒரே டெஸ்டில் இரு இன்னிங்ஸ்களிலும் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஓஜாவுக்கு இது முதல் முறை.