சச்சின் டெஸ்டில் நுழைந்தபோது கோலி, புஜாரா, தோனி, தவான் என்ன செய்து கொண்டிருந்தனர்?
வியாழன், 17 அக்டோபர் 2013 (14:26 IST)
FILE
24 ஆண்டுகள் அயராத கிரிக்கெட்டிற்குப் பிறகு சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறவுள்ளார். அவர் முதல் பந்தை பாக். அசுர வீச்சாளர் மூலம் எதிர்கொண்டபோது அவருக்கு வயது 16 ஆண்டுகள் 205 நாட்கள்.
1983 உலகக் கோப்பையை கபில் தலைமையில் வென்ற போது சச்சின் டெண்டுல்கருக்கு 10 வயது.
அதேபோல் சச்சின் 16 வயதில் டெஸ்ட் கிரிக்கெட் முதல் பந்தை எதிர்கொண்டபோது அவருடன் இன்று விளையாடிய இளம் தலைமுறை வீரர்களான கோலி, புஜாரா, ரஹானே, தோனி, ஷிகர் தவான் என்ன செய்துகொண்டிருந்தனர்?
இதோ சில சுவையான தகவல்கள்:
பாகிஸ்தானை சச்சின் முதல் டெஸ்டில் எதிர்கொண்டபோது இன்றைய கேப்டன் தோனி 4ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.
FILE
சச்சின் முதல் டெஸ்ட் போட்டியை விளையாடியது,நவம்பர் 15,1989. வீரத் கோலி இப்போது சச்சின் இடத்தை பிடிக்கும் வீரர் என்று நம்பப்படுகிறது. 1989ஆம் ஆண்டு சச்சின் முதல் டெஸ்ட் போட்டியை ஆடிய அன்றைய தினம் கோலியின் வயது 10 நாட்களே!
FILE
சச்சின் இந்தியாவுக்காக முதல் டெஸ்ட் போட்டியில் மட்டையைத் தூக்கியபோது இன்றைய டெஸ்ட் நட்சத்திரம் செடேஷ்வர் புஜாராவுக்கு வயது 22 மாதங்களே.
FILE
இதே காலத்தில் இன்றைய துவக்க வீரரான முரளி விஜய்க்கு வயது 5.
சச்சின் டெஸ்ட் டெபுவை ஆடியபோது ஷிகர் தவான் பள்ளிக்கல்வியின் டெபுவை மேற்கொண்டார்.
நவம்பர் 15, 1989 ஆம் ஆண்டு இன்றைய சென்சேஷனான ரவீந்தர் ஜடேஜாவுக்கு வயது ஒன்று. ஜடேஜா பிறந்த நாள் டிசம்பர் 6, 1988.