கிரிக்கெட் பாப்கார்ன்: சுவையான புள்ளி விவரங்கள்!

வியாழன், 28 நவம்பர் 2013 (15:19 IST)
FILE
இந்தியாவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய அயல்நாட்டுபந்து வீச்சாளர்கள் யார் தெரியுமா?

இந்தியாவில் சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அயல்நாட்டு பந்து வீச்சாளர்கள் இரண்டு பேர். ஒன்று முத்தையா முரளிதரன், 2. கார்ட்னி வால்ஷ். இருவரும் 78 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர். மிட்செல் ஜான்சன் 65 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்தப் பட்டியலில் 3வதாக உள்ளார்.

ரோகித் சர்மாவின் தனிச்சிறப்பு!

ஒருநாள் போட்டியில் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக இரட்டை சதம் விளாசிய ரோகித் சர்மா அதன் பிறகு டெஸ்ட் டெபுவில் அடுத்தடுத்து 2 சதங்களை எடுத்தார். மொத்தம் 3 சர்வதேச சதங்கள் தொடர்ச்சியாக. இந்த சாதனையை வேறு யாரும் செய்திருக்கிறார்களா?
FILE

ஏன் இல்ல? கேரி ஸொபர்ஸ், மற்றும் கிரகாம் கூச் உள்ளனர். இருவருமே மூசதத்துடன் தொடங்கினர். ஆனால் இதில் பலே கில்லாடி ஜாகீர் அப்பாஸ்தான், 1982- 83ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிராக மொத்தம் 5 சர்வதேச சதங்களை தொடர்ச்சியாக விளாசினார் ஜாகீர் அப்பாஸ்.
FILE

ஆனால் மேற்கிந்திய அணியின் எவர்டன் வீக்ஸ் டெஸ்ட் போட்டியில் 5 இன்னிங்ஸ்களில் தொடர் சதங்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளார். டான் பிராட்மேன் 6 தொடர் சதங்களை எடுத்துள்ளார். அதாவது இது இன்னிங்ஸ் அல்ல, 6 டெஸ்ட் போட்டிகளில் தொடர் சதங்கள்.
FILE


சச்சின் டெண்டுல்கரின் வறண்ட நாட்கள்!

FILE
23 டெஸ்ட் போட்டிகள் அதாவது 39 இன்னிங்ஸ் சதமே இல்லை. 50 ரன்களுக்கும் மேல் சராசரி வைத்திருக்கும் ஒரு கிரேட் பேட்ஸ்மெனுக்கு இது போல் முன்னால் நடந்ததுண்டா என்றால் இருக்கிறது. ஆலன் பார்டர் 96வது டெஸ்ட்டில் ஒரு சதம் எடுக்கிறார் அதன் பிறகு 133வது டெஸ்டில் சதம் எடுக்கிறார். இடையில் கிட்டத்தட்ட 36 டெஸ்ட், சுமார் 60 இன்னிங்ஸ்கள் சதம் எடுக்காமல் ஆஸ்ட்ரேலிய அணியில் காலந்தள்ளியுள்ளார் பார்டர். ஆனால் அவரது கடைசி சராசரியும் 50.56.

வெப்துனியாவைப் படிக்கவும்