என்னை வைத்து அர்ஜுன் டெண்டுல்கரை எடைபோடாதீர்கள் - சச்சின்
திங்கள், 18 நவம்பர் 2013 (15:32 IST)
FILE
ஓய்வு பெற்ற பிறகு சச்சின் கொடுத்த பேட்டியில் அவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கர் பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது, சச்சின் என்னுடன் அவரை ஒப்பிடாதீர்கள் என்றார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
ஒரு தந்தையாக நான் கூறுகிறேன் அவனை தனியே விட்டு விடுங்கள். அவன் கிரிக்கெட் ஆட்டத்தை முதலில் நேசித்து மகிழ்வுடன் விளையாடட்டும்.
நான் இப்படி விளையாடினேன், அப்படி விளையாடினேன் என்று கூறி அர்ஜுனுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடாது.
எனக்கு அதுபோன்ற ஒரு நெருக்கடி கொடுக்கப்பட்டிருந்தால் என் கையில் பேட் இருந்திருக்காது பேனாதான் இருந்திருக்கும், ஏனெனில் என் அப்பா ஒரு பேராசிரியர் அவரது துறை இலக்கியம். அப்போது என் தந்தையிடம் ஒருவரும் கேட்கவில்லை ஏன் உன் பையன் மட்டையும் கையுமாக இருக்கிறான் என்று.
ஆகவே அர்ஜுன் பேட்டைப் பிடித்துள்ளான். அவன் கிரிக்கெட்டை மிகவும் நேசிக்கிறான். நான் அவனிடம் கூறுவேன், கிரிக்கெட் மீது பைத்தியம் பிடித்த ஒரு காதல் இருந்தால்தான் சாதனை செய்ய முடியும் என்று அவனுக்கும் அத்தகைய காதல் இருக்கிறது. அவன் சிறப்பாக விளையாடுகிறானா என்பது பற்றி நான் எந்த வித நெருக்கடியையும் கொடுக்கப்போவதில்லை.
மேலும் எதிர்காலம் என்பது கடவுள் கயில் உள்ளது நம் கையில் இல்லை.