பன்னீர் கோப்தா

வியாழன், 20 டிசம்பர் 2012 (18:29 IST)
FILE
பன்னீர் கோப்தா ஒரு பிரபலமான வடஇந்திய உணவாகும். சப்பாத்தி, தோசை போன்ற உணவுகளுடன் சாப்பிட்டால் மிக அருமையாக இருக்கும்.

தேவையானவை

பன்னீர் - 250 கிராம்
வெங்காயம் - 2
தனியா தூள் - 1 ஸ்பூன்
உலர்ந்த திராட்சை - சிறித
தக்காளி - 1
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - ¼ ஸ்பூன
எண்ணெய் - தேவைகேற்
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
பால் - 1 கப்

செய்முற

பன்னீரை துருவி கொள்ளவும்.

சிறிதளவு வெங்காயம், உலர்ந்த திராட்சை, உப்பு, துருவிய பன்னீர் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

இந்த உருண்டைகளை மிதமான தணலில் பொன்னிறமாக பொறித்து தனியே வைக்கவும்.

ஒரு வாணலியில் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வறுத்து அதை விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

அதே வானலியில் எண்ணெய் விட்டு அரைத்த வெங்காயம், தக்காளி விழுது, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து நன்கு சமைக்கவும்.மசாலா நிறம் மாறியவுடன் அதோடு பால் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

பொரித்த பன்னீர் உருண்டைகளை சேர்த்து 5 நிமிடங்கள் கழித்து சூடாக பரிமாறவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்