திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நிறுத்தம்

திங்கள், 7 செப்டம்பர் 2009 (10:43 IST)
க‌‌ன்‌னியா‌க்கும‌ரி கட‌ற் பகு‌தி‌யி‌ல் நே‌ற்று கட‌ல் ‌சீ‌ற்ற‌ம் அ‌திகமாக‌க் காண‌ப்ப‌ட்டதை‌த் தொட‌ர்‌ந்து பய‌ணிக‌ளி‌ன் பாதுகா‌ப்பை‌க் கரு‌தி, ‌திருவ‌ள்ளுவ‌ர் ‌சிலை‌க்கு‌ச் செ‌ல்லு‌ம் படகு‌ப் போ‌க்குவர‌த்து த‌ற்கா‌லிகமாக ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.

கன்னியாகுமரி பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் இருந்தே தொடர்ந்து மழை பெய்து வந்தது. இ‌ந்த ‌நிலை‌யி‌ல், கன்னியாகுமரி கட‌ற் பகு‌தி‌யி‌ல் கடல்சீற்றம் அ‌திகமாக‌க் காணப்பட்டது. ராட்சத அலைகள் எழுந்து கட‌ற்கரையை ஆ‌க்‌கிர‌மி‌த்தன.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் நேற்று காலை 8 மணிக்கு வழக்கம்போல விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு போக்குவரத்து தொடங்கியது. சுற்றுலா பயணிகளும் ஆர்வமுடன் விவேகானந்தர் மண்டபத்திற்கு புறப்பட்டு சென்றனர். அங்கிருந்து திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து தொடங்குவது வழக்கம். ஆனால் நேற்று அலைகளின் வேகம் அதிகமாக இருந்ததால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

இதனால் கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை பட‌கி‌ல் செ‌ன்று சென்று பார்க்க முடியாமல் ஏமாற்ற‌த்துட‌ன் ‌‌திரு‌ம்‌பின‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்