கடுமையான வெயில் நேரங்களில் இதை மட்டும் சாப்பிடாதீங்க..?

Prasanth Karthick

வெள்ளி, 29 மார்ச் 2024 (09:12 IST)
கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் உணவில் கட்டுப்பாடாக இருப்பது உடல் பிரச்சினைகள் வராமல் தடுக்கும். கோடை காலத்தில் காரமான உணவுகள் சாப்பிட்டால் என்ன ஆகும் என்பது குறித்து பார்ப்போம்.



காரமான உணவு வகைகள் உடல்சூட்டை அதிகப்படுத்தும் என்பதால் கோடைகாலத்தில் அவற்றை தவிர்ப்பது நல்லது.

அசைவ வகைகளில் உடல் சூட்டை அதிகமாக்கும் நண்டு, சிக்கன், இறால் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. இவற்றில் உள்ள சூடு காரணமாக உடல்சூடு அதிகரித்து அசௌகர்யங்கள் ஏற்படலாம்.

புளிப்பு, காரம் அதிகம் சேர்க்கப்படும் புளிக்குழம்பு, காரக்குழம்பு வகைகளை தவிர்ப்பது நல்லது. பொதுவாக புளி அதிகம் சாப்பிடுவது உடல்சூட்டையும், பித்தத்தையும் அதிகரிக்கும் என்பதால் வெயில் காலத்தில் தவிர்ப்பது நல்லது.

காரமான உணவுகள் தொடர்ந்து சாப்பிட்டால் உடல் சூட்டால் நீர்க்கடுப்பு, நீரில் இரத்தம் வெளியேறுதல் பிரச்சினைகள் ஏற்படலாம்.

எண்ணெய் பலகாரங்கள், தேநீர் வெயில் நேரத்தில் பித்தத்தை ஏற்படுத்தும். அதனால் அவற்றை முடிந்தளவு அதிகமான வெயில் இருக்கும் சமயங்களில் தவிர்ப்பது நல்லது.

அதிக காரமான பச்சை மிளகாய், மிளகு, மசாலா சேர்த்த உணவுகள் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. மேலும் இது ஆசனவாயில் எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும்.

கடைகளில் விற்கும் பரோட்டா போன்ற மைதா உணவுகள், ஃபாஸ்ட் புட் வகைகளை தவிர்ப்பது நல்லது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்