வயிறு மற்றும் கருப்பை சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வெந்தயம்!!

உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் வெந்தயத்தில் பல்வேறு மருத்துவக் குணங்கள் நம்மை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.


 
 
* பெண்களின் கருப்பை சம்பந்தமானப் பிணிகளை விரட்டும் ஒப்பற்றக் கீரை. வெந்தயத்தை முளைக்க வைத்து கீரைகளைச் சாறாகப் பயன்படுத்தும் சமயம் பல கொடிய பிணிகளை விரைந்து நீக்குகிறது. கசப்பானது. குளிர்ச்சியானது. குடல் புண்ணால் நெடுங்காலம் அவதியுறுபவர்கள் கூட வெந்தயக்கீரைச் சாறால் அருமையான நலம் பெறலாம்.
 
* ஆசனவாய் பிளவு, மூலநோய், அதிக அமிலத்தன்மை, ஒபேசிட்டி, உடல் பருமன், முகப்பரு தொல்லை, பொடுகு போன்ற தொல்லைகளுக்கு தீர்வு தரும். பெண்களின் தீராவியாதிகளான மாதவிடாய் தொல்லைகள், சூதக வியாதிகள், முறையற்ற மாதவிடாய், வெள்ளைப்படுதல், பெண் உறுப்பு அரிப்பு, காம்பு நோய்கள், கர்ப்பப்பை கோளாறுகள் அனைத்துக்கும் இயல்பான தீர்வு தருவது வெந்தயம்.
 
* இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும். காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின் வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம். வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் தீரும்.
 
* ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்துக் கொண்டு, வாணலியில் போட்டு வறுத்து, சிறிதளவு பெருங்காயத்தையும் வறுத்து ஆற வைத்த பின் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள். பொடியை தினமும் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது. மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும்.
 
* மூட்டுவலிக்கு வெந்தயத் தண்ணீர் மிகவும் அருமருந்தாகும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் மூட்டு வலி ஏற்பட்டால், வெந்தயப் பொடியை சிறிய வெல்ல கட்டியுடன் கலந்து சிறு உருண்டையாக்கி தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலி குறையும்.
 
* ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வெந்தயம் பயன்படுகிறது. பிரசவமான பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்