பூசணிக்காயின் விதைகளில் விட்டமின் பி, விட்டமின் ஏ, மினரல்ஸ் எனப்படும் தாது உப்புக்கள், கால்சியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், ஸிங்க், லினோனெலிக் அமிலம் ஆகியன அடங்கியுள்ளன.
வெண்பூசணியின் முற்றிய காய்கள் தலைவலி, நெஞ்சு சளி, மூச்சிரைப்பு ஆகியவற்றுக்கு மருந்தாவதோடு சிறுநீரக மற்றும் நோய்களையும் போக்கும்.
பூசணிக்காய் வயிற்றிலுள்ள நாடாப்புழுக்களை கொல்லக் கூடியது. மூலத்திற்கும் மருந்தாக பயன்படக் கூடியது. சித்த மருத்துவத்தில் வெண் பூசணிப் பூவை மஞ்சள் காமாலை நோயைப் போக்கவும், சீதபேதி மற்றும் இருமலைப் போக்கவும் பயன்படுத்துகின்றனர்.