இயற்கையாகவும் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாக, சில விஷமற்றதாகவும் வளரும் விஷக்காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ணமுடையதாகவும் இருக்கும். மிகுந்த மருத்துவப் பயன் கொண்டதாக உள்ளது. காளான் இதயத்தைக் காக்கும் அற்புத உணவாகும்.
பொட்டாசியம் சத்து உணவுப் பொருட்களில் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. அதிகம் உள்ள உணவு காளான்தான் 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 44%, சோடியம் 9% உள்ளது. எனவே இதயத்தைக் காக்க உணவாக காளான் உள்ளது.
உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது. எளிதில் சீரணமாகும் தன்மை கொண்டது. கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது. உடல் இளைத்தவர்கள் தினம் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.